தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 Shoot Vijay Meets Fans In Karnataka

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64 Shoot Vijay Meets Fans In Karnataka

இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஜயை காண ஏராளாமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.விஜய் அவர்களை சந்தித்து கையசைத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு கிளம்பினார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.