தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Thalapathy 64 First Schedule To End Soon Vijay

இதனை அடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thalapathy 64 First Schedule To End Soon Vijay

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் இருந்து தயாரிப்பாளர் விலகுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

Thalapathy 64 First Schedule To End Soon Vijay

இந்த செய்தி வெறும் வதந்தி தான் ரசிகர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்று படத்தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி நடந்து வருகிறது என்றும் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.