ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

shanthanu

இந்நிலையில், பிகில் படம் பார்த்துவிட்டு நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், விஜய் அண்ணனுக்கு வாழ்த்துகள். உச்ச நடிகர் கதைக்கு முக்கியத்துவம் தந்து நடித்துள்ளார். ராயப்பன் பாத்திரத்தில் என்னவொரு நடிப்பு. ஒரே மாதிரியாக இருக்கிறார், நடிக்கிறார் என்று கிண்டலடித்தவர்களுக்கு பிகில் தான் பதில்.

shanthanu

shanthanu

இதனைத் தொடர்ந்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "டேய் நேரத்தை வீணடிக்காதீர்கள். சமூகவலைத்தள வசையும் சண்டையும் நேர விரயம். உங்கள் லட்சிய ஹீரோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவங்க பெயரைக் கெடுக்காதீர்கள். நீங்கள் யார் மீது குறிவைத்தாலும் அவர் உங்களைப் புறக்கணிக்கவே போகிறார். எனவே தயவு செய்து நேர விரயம் செய்யாதீர்கள். இது அனைவருக்கும் தான். கேக்கறவங்க கேளுங்க, கேக்காதவங்கள சொல்லிப் பயனில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகர் சாந்தனு தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

thalapathy64