தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயாவின் லுக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.தற்போது இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு வலிமையை கொண்டாட ரசிகர்கள் ரெடி ஆகி வருகின்றனர்.