தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைப்பட்டுள்ளது.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றும் படத்தின் ஷூட்டிங் கொஞ்ச நாள் மீதமுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

பெரிதாக எதுவும் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் தவித்து வந்தனர்.தற்போது படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா , வலிமை படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் உள்ளது என்றும்,ஓப்பனிங் பாடல் செம மாஸாக இருக்கும் என்றும் இரண்டு அப்டேட்களை கொடுத்துள்ளார்.இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.