தமிழ் சினிமாவில் பல கட்டங்களில் பல நாயகர்கள் வெற்றிகரமாக இருந்துள்ளனர்.ஆனால் காலங்களை கடந்து நிற்பது சில உச்சநட்சத்திரங்கள் மட்டுமே.அப்படி எம்ஜி ஆர்-சிவாஜி,ரஜினிகாந்த்-கமல்ஹாசன் வரிசையில் அடுத்ததாக இருப்பது விஜய்-அஜித் இருவரும் தான்.

Thala Ajith Thalapathy Vijay Instagram Live

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் இவர்கள் இருவரும் வெற்றிகரமாக இருந்து வருகின்றனர்.தல-தளபதி இருவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்

Thala Ajith Thalapathy Vijay Instagram Live.

தற்போது கொரோனா காரணமாக பல பிரபலங்களும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்து தங்கள் ரசிகர்களுடன் பேசியும்,பிற பிரபலங்களுடன் பேசியும் வருகின்றனர்.அதுபோல் அஜித்தும்-விஜயும் இன்ஸ்டாகிராமில் இணைந்து லைவ்வாக வந்தால் செம ஹிட் அடிக்கும் என்று சோனி நிறுவனம் கற்பனையாக தங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.