தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக இருப்பவர் தல அஜித்.ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் படையையே வைத்துள்ளார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Thala Ajith Request Fans Bday Celebration Corona

இதனை தொடர்ந்து இவர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் வலிமை படத்தில் நடித்துவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.மே 1 அன்று அஜித்தின் பிறந்தநாள் ஊரடங்கு உத்தரவுகள் இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் இதனை விமர்சையாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Thala Ajith Request Fans Bday Celebration Corona

அஜித்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய காமன் DP ஒன்றை பிரபலங்கள் வெளியிடவுள்ளனர்.கொரோனா நேரத்தில் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்றும் அந்த காமன் DPயை வெளிடியிடவேண்டாம் என்றும் ரசிகர்கள் பத்திரமாக இருக்கவேண்டும் என்றும் அஜித்தின் ஆபிஸில் இருந்து போன் வந்ததாக நடிகரும்,இயக்குனருமான ஆதவ் கண்ணதாசன் பதிவிட்டுள்ளார்.இதேபோல தனக்கும் போன் வந்ததாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.