தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின் குதிரை படத்தின் தமிழ் ரீமேக்காக அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வலிமை திரைப்படத்தை இயக்குகிறார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க, நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, யோகி பாபு, குக்கு வித் கோமாளி புகழ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகும் வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். வெகு நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தல அஜித்தின் மாஸ் கெட்டப்புகளோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தல அஜித்தின் இதுவரை வெளிவராத மாஸ்ஸான பைக் ரைடிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பைக் ரைடிங், ரேசிங், பைக் ஸ்டன்ட் என அனைத்திலும் மிகவும் ஆர்வமுள்ள தல அஜித் அவ்வபோது நீண்ட பயணமாக பைக் ரைடிங் செய்வார் என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயமே. அந்தவகையில் சமீபத்தில் தல அஜித் பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தீயாக பரவும் அந்த ட்ரெண்டிங் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.