தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகத் திகழும் தல அஜித் குமார் அவரது ரசிகர்களுக்கு வெறும் நடிகராகவும் நட்சத்திரமாகவும் மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் விடாமுயற்சியின் உருவமாகவும் விளங்குகிறார்.

நடிகர் அஜித் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் H.வினோத் உடன் இணைந்து இருக்கும் தல அஜித்தின் புதிய திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வலிமைப் படத்தின் முதல் பாடலாக நாங்க வேற மாரி பாடலும் வெளியானது. இந்நிலையில் தற்போது திரையுலகில் நடிகராக களமிறங்கி 30 ஆண்டுகளை கடந்த நடிகர் அஜித், 30 ஆண்டு திரைப்பயணம் குறித்து தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் முக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், ரசிகர்கள், வெறுப்பவர்கள் & நடுநிலையாக இருப்பவர்களே ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள்...  ரசிகர்களின் அன்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்... அதேபோல் பெறுபவர்களின் வெறுப்பையும் நடுநிலையாளர்களின் கண்ணோட்டத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்...
வாழு & வாழவிடு... அளவு கடந்த அன்போடு எப்போதும்... அஜித் குமார் என பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தல அஜித்குமாரிடமிருந்து வந்திருக்கும் இந்த ஸ்பெஷல் மெசேஜ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.