தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. கடைசியாக பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித்குமார்,

தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு வெளியான நாங்க வேற மாரி பாடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. விரைவில் வலிமை படத்தின் டீசர் டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறையில் மட்டுமல்லாது ஃபார்முலா 1 ரேசிங், பைக் ரேசிங் & துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் அதிக ஆர்வமுடையவர் தல அஜித். இந்நிலையில் தற்போது தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த வீடியோவை கீழே உள்ள நீங்கள் காணலாம்.