தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் ,ஃபேவரட் ஹீரோவாகவும், ரசிகர்கள் தல என கொண்டாடும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை படத்தை போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடலாக வெளிவந்த நாங்க வேற மாரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து வெளிவந்த வலிமை GLIMPSE வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 இந்நிலையில் சமீபத்தில் நீண்ட தூர பயணமாக பைக்கில் சுற்றுப்பயணம் கிளம்பிய தல அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது தல அஜித் குமார் அவரது மகனான ஆத்விக் உடன் இணைந்திருக்கும் புதிய புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. அந்தப் புகைப்படம் இதோ…