விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Thala Ajith Injured in Valimai Shooting Bike Chase

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Thala Ajith Injured in Valimai Shooting Bike Chase

இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது பைக் சேஸ் காட்சி ஒன்றில் நடிக்கையில் அஜித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.பைக் ஸ்கிட் ஆனதில் அஜித்துக்கு கை கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Thala Ajith Injured in Valimai Shooting Bike Chase

20 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித் மீண்டும் தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டு தனது குடும்ப டாக்டரை சந்தித்துள்ளார் என்றும் அவரை அடுத்த சில நாட்களுக்கு ஒய்வு எடுக்கும்படி மருத்துவர் தெரிவித்துள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.அஜித் விரைவில் குணமடைந்து ஷூட்டிங்கிற்கு திரும்ப வேண்டும் என்று கலாட்டா சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

Thala Ajith Injured in Valimai Shooting Bike Chase