இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் சிட்னி மைதானத்தில் அஜித் ரசிகர்கள் செய்த செயல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. முதலில் நடந்து முடிந்த இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதால் டி20 சீரிஸை கைப்பற்ற முடிந்தது. 

இன்று சிட்னி மைதானத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாம் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை பார்க்க வந்த பார்வையாளர்களான அஜித் ரசிகர்கள் திடீரென அஜித் மற்றும் நடராஜன் இணைந்து உள்ள போஸ்டரை கையில் காண்பித்து தெறிக்க வைத்தனர். 

இந்த போஸ்டரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பி வரும் ஆஸ்திரேலிய தொலைக்காட்சியும் இதனை ஒளிபரப்ப்பியதால் தற்போது இந்த வீடியோ உலகம் முழுவதும் தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் புகைப்படத்துடன் அடிக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் தான் தற்போதைய டிரெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 

போனி கபூர் தயாரிக்கும் வலிமை திரைப்படம் குறித்த அப்டேட் ஏதாவது வெளியாகாதா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கும்  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹுமா குரேஷி நாயகியாகவும், அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. 

படக்குழு தரப்பில் இருந்து வலிமை படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் அஜித்தின் பைக் வீலிங் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் வலிமை படத்தின் ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளை வெளிநாட்டில் புதிய தொழில்நுட்பம் மற்றும் சண்டைக் கலைஞர்களை பயன்படுத்தி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. 

தல அஜித் சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும், அவர் குறித்த செய்திகள் ட்ரெண்டாவது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.