தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு.மாஸ் ஹீரோவாக உருவெடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார் மகேஷ்பாபு.கடைசியாக இவர் நடிப்பில் Sarkaru Vaari Paata படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து மகேஷ்பாபு SSMB28 படத்தில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகரான
முன்னாள் சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது மகேஷ்பாபு குடும்பத்தை சார்ந்து ஒருதுயரமான செய்தி கிடைத்துள்ளது.

மகேஷ்பாபுவின் தாயார் இந்திராதேவி வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார் என்ற துக்க செய்தி கிடைத்துள்ளது.மகேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பல முக்கிய பிரபலங்களும் மகேஷ்பாபு இல்லத்தில் சென்று இந்திராதேவிக்கு தங்கள் கடைசி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.இறுதிச்சடங்குகள் இன்றே நிறைவடையும் என்று தெரிகிறது