தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவின் குடும்பத்தில் இருந்து ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் சாய்தரம் தேஜ்.தொடர்ந்து நல்ல படங்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

நேற்று இரவு ஹைதெராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது.தீடிரென்று அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிக்சை வழங்கி வருகின்றனர்.

ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அடி எதுவும் படவில்லை என்றும் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு சீராக உள்ளார் விரைவில் குணமடைவார் என்றும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வளர்கின்றனர்.இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வேண்டுதங்களை தெரிவித்து வருகின்றனர்.