போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில்  2 பெண் பயிற்சி பைலட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம், பந்த்வாரம் மண்டல் என்ற பகுதியில் ஒரு பெண் பயிற்சி பைலட்டும், ஒரு ஆண் பயிற்சி பைலட்டும், இன்று காலை போர் விமானத்தை இயக்குவது தொடர்பாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் கனமழை செய்யத் தொடங்கியது. 

Military aircraft

பயிற்சி பைலட்டுகள் இருவரும், மழையையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே பெண் பைலட் உட்பட  2 பயிற்சி பைலட்டுகள் உயிரிழந்தனர். 

போர் விமானம் விபத்து குறித்து விரைந்து வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, பயிற்சியின்போது கனமழை பெய்ததால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் போர் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பதும் தெரியவந்தது. இதனிடையே, இந்த விமானம் தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.