அசுரன் புகழ் டீஜே நடிப்பில் வெளியான ஆசை ததும்புச்சா பாடல் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | February 14, 2020 17:36 PM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் அசுரன். தனுஷ், கென் மற்றும் மஞ்சு வாரியரின் அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தது இப்படம். இதில் முக்கிய பாத்திரத்தில் டீஜே நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிப்பில் வெளியாகிருக்கும் பாடல் வீடியோ ஆசை ததும்புச்சா. இவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். டீஜே பாடிய இந்த பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். புதுப்பெட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த பாடலை கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சுவற்றில் போஸ்டர் ஒட்டுபவரின் காதலை அழகாக எடுத்துரைக்கும் இந்த பாடல் இளைஞர்களை ஈர்க்கும் என்றே கூறலாம். நடிகை இந்துஜா கைவசம் காக்கி, நெற்றிக்கண் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.