கடந்த 2007-ம் ஆண்டுவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் பொல்லாதவன். இந்தப் படத்தில் திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், பானுப்ரியா, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Teejay Imitates Dhanush Polladhavan Dialogue

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Teejay Imitates Dhanush Polladhavan Dialogue

இந்நிலையில் நடிகர் மற்றும் பாடகரான டீஜே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொல்லாதவன் படத்தில் தனுஷ் பேசும் மாஸ் டயலாக்கை பேசி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். டீஜே கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார்.