தமிழ் இசை ரசிகர்கள் விரும்பும் சூப்பர் ஹிட் ஆல்பம் பாடல்களை கொடுத்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் டிஜே அருணாச்சலம். லண்டன் வாழ் தமிழரான டிஜே அருணாச்சலம் தற்போது தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான அசுரன் படத்தில் தனுஷின் மகனாக முக்கிய வேடத்தில் நடித்த டிஜே அருணாச்சலம் தற்போது சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜே அருணாச்சலத்தின் ஆல்பம் பாடல்களில் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஆல்பமாக கொண்டாடப்பட்டது முட்டு முட்டு பாடல். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற முட்டு முட்டு பாடலின் வெற்றியை தொடர்ந்து தற்போது முட்டு முட்டு 2 தயாராகியுள்ளது. இப்பாடல் வீடியோவை குட்டி பட்டாசு & வாடா ராஜா பாடல்களை இயக்கிய இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார்.

ஸ்டூடியோ FIVE புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்பாடலில் முன்னணி ராப் பாடகர் யோகி.பி மற்றும் விஜய் டிவி சிவாங்கி இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் முட்டு முட்டு 2 பாடலில் டீஜே உடன் இணைந்து நடித்துள்ளார்.  இந்நிலையில் முட்டு முட்டு 2 பாடல் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த பாடல் வீடியோ இதோ…