சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் கிரிஜாஸ்ரீ.ஜெயா டிவியில் ஒளிபரப்பான தாய் மண்ணின் சுவாமிகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் தொகுப்பாளராக அறிமுகமானார் கிரிஜா ஸ்ரீ.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கினார் கிரிஜா.

தொடர்ந்து சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கிரிஜா.இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.அடுத்ததாக கேப்டன் டிவியில் ஒளிபரப்பானா அந்தரங்கம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் கிரிஜா ஸ்ரீ.

அந்தரங்கம் தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் பிரபல தொகுப்பாளினியாக உருமானினார்.தொடர்ந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது திறமையை நிரூபித்து வந்தார் கிரிஜா ஸ்ரீ.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் கிரிஜா ஸ்ரீ அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெகு விரைவில் தனது திருமணம் நடக்கவுள்ளதாக தனது வருங்கால கணவருடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.புகைப்படம் பின்புறமாக எடுக்கப்பட்டதால் மாப்பிள்ளை யார் என்று தெரியவில்லை.மாப்பிள்ளை யார் என்பது குறித்து கிரிஜா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிரிஜாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கிரிஜா தனது பதிவில் முத்துராஜ் என்று ஒரு ஹாஸ்டேக்கை பதிவிட்டுள்ளார்,அது மாப்பிள்ளையின் பெயராக இருக்க அதிக வாய்புகள் இருக்கிறது இருந்தாலும் மாப்பிள்ளை குறித்து தெரிந்துகொள்ள நாம் கொஞ்சம் பொறுத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

A post shared by 𝒢𝒾𝓇𝒾𝒿𝒶𝑒𝓈𝓇𝑒𝑒_𝑅𝑒𝒹𝒽𝒶 🎀 (@girijaesree_redha)