கொரோனா பரவல் இந்தியாவில் அதிகப்படியாக இருந்துவருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்திலும் இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல சினிமா ஷூட்டிங்குகள் ஏற்கனவே கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டன.சீரியல்,டிவி நிகழ்ச்சிகளின் ஷூட்டிங்குகள் தொடர்ந்து நடந்து வந்தன இன்று முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு செயல்பாட்டிற்கு வருவதால் இன்றுடன் டிவி மற்றும் சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் பெரும்பாலும் டிவியை விரும்பி பார்ப்பார்கள் என்பதால்,ஷூட்டிங்குகள் தொடர்ந்து நடைபெற்றால் பல குடும்பங்கள் பயன்படும் வகையில் இருக்கும் எனவே ஷூட்டிங் நடத்த அனுமதி கோரி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் குறிப்பாக ஷூட்டிங்குகள் அதிகம் நடைபெறும் சென்னையில் அதிகம் இருப்பதால்,ஷூட்டிங் நடைபெற முதல்வர் அனுமதி அளிப்பாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஷூட்டிங் எடுத்தவரை சீரியல்களை சேனல்கள் ஒளிபரப்புமா அல்லது சில எபிசோடுகளை மீதம் வைத்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கிய பின்னர் ஒளிபரப்புமா என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.எனவே மீண்டும் தொலைக்காட்சிகள் தங்கள் பழைய நிகழ்ச்சிகள் படங்கள் சூப்பர்ஹிட் சீரியல்கள் உள்ளிட்டவற்றை ஒளிபரப்புவார்கள் என்று தெரிகிறது.சனிக்கிழமைகளில் இதுவரை சீரியல்களை ஒளிபரப்பி வந்த சன் டிவி இந்த வாரமே சீரியல்களுக்கு பதிலாக படங்களை ஒளிபரப்படுகின்றனர்.