சின்னத்திரையில் பெயர் எடுத்த சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ரிந்தியா.சன் டிவியின் மெகாஹிட் தொடர்களில் ஒன்றான மெட்டி ஒலி தொடரின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் , தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

அடுத்ததாக சன் டிவியின் மற்றுமொரு ஹிட் தொடரான திருமதி செல்வம் சீரியலில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் ரிந்தியா.இந்த தொடர் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது.இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்து பிரபலமானவராக மாறினார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து அசத்தியிருந்தார் ரிந்தியா.இவற்றை தவிர சில திரை படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ரிந்தியா.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் ரிந்தியா.தற்போது பாத்டப்பில் இருந்தபடி சில கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.