சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனன்யா மணி.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வந்தாள் ஸ்ரீதேவி.2018 முதல் 2019 வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரின் ஹீரோயினாக அனன்யா மணி நடித்திருந்தார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அனன்யா மணி.இந்த சீரியலை அடுத்து இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனன்யா அவ்வப்போது தனது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.அடுத்தாக மியூசிக் வீடியோ,ஆல்பம் பாடல்,திரைப்படம் என்று நடித்து வருகிறார் அனன்யா மணி.

தற்போது இவர் அடுத்ததாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் Web என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.வெள்ளித்திரையில் அறிமுகமாகும் அனன்யாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.