ஒரு படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சுன்னா , அந்த படத்தோட கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறதுக்கு ஏற்ற மாதிரி இயக்குனர்கள் கதையை கொண்டு போவாங்க இப்படி எடுக்கப்பட்ட படங்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடிச்சுருக்கு.இந்த ட்ரெண்ட் சிங்கம் 2,காஞ்சனா 2,சென்னை 28 2,பாகுபலி 2 உள்ளிட்ட படங்கள்ல சூப்பரா ஒர்க்கவுட் ஆகி செம ஹிட் அடிச்சது.சில பார்ட் 2 படங்கள் ஒர்க்அவுட் ஆகாமலும் போயிருக்கு.

இந்த ட்ரெண்ட் நடுவுல கொஞ்ச வருஷமா இல்லமா இருந்தது ராஜமௌலி எடுத்த பாகுபலி படம் உலகம் முழுக்க பெரிய வரவேற்பை பெற இந்த ட்ரெண்ட் திரும்பவும் ஸ்டார்ட் ஆகியிருக்கு , இப்போ இருக்குற Pan Indian மார்க்கெட் , OTT கலாச்சாரம்ன்னு ஒரு படம் ஈஸியா ரீச் ஆக நிறைய படங்கள் செகண்ட் பார்ட் தைரியமா எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

கே ஜி எப் , புஷ்பா , RRR , விக்ரம் என ஒரு மொழி படத்தை இப்போ இந்தியாவே கொண்டாடுற அளவு மார்க்கெட் வளர்ந்துருக்கு.படம் நல்லாயிருந்தா எந்த மொழியா இருந்தாலும் பார்ப்போம்னு ரசிகர்களும் ரெடியா இருக்காங்க.

பல படங்கள் எடுக்குறப்போவே செகண்ட் பார்ட்க்கு பிளானிங்கோட எடுக்குறாங்க , பல படங்கள் வெற்றியை பொறுத்து அடுத்த பார்ட் எடுக்குறாங்க , சில படங்கள் அடுத்த படங்களுக்கான லீட் காட்சியை வெச்சு ஹாலிவுட் ஸ்டைல்ல ரசிகர்களோடு எதிர்பார்ப்பை தூண்டுறாங்க.

பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களா எடுக்கப்படற இந்த படங்கள் ரசிகர்கள் கிட்ட பயங்கரமான வரவேற்பை வாங்குறத பார்த்துட்டு அடுத்தடுத்து ஏகப்பட்ட அடுத்த பார்ட் படங்கள் ரெடி ஆகிட்டு இருக்கு , அது என்னென்ன அப்பன்கிறத நம்ம இப்போ பார்க்கலாம் வாங்க

வெந்து தணிந்தது காடு

சிலம்பரசன் நடிச்சு கெளதம் மேனன் இயக்கத்துல உருவான இந்த படத்தோட முதல் பார்ட்லேயே செகண்ட் பார்ட்க்கான லீட் வெச்சு ரசிகர்களோட ஆர்வத்தை தூண்டியிருக்காங்க.அடுத்த பார்ட்க்காக ரசிகர்கள் ஆர்வத்தோட வெயிட் பண்ணிட்டு இருக்காங்க

பொன்னியின் செல்வன்

தமிழர்களோட வரலாறை சொல்ல வர ஒரு படம் , மணிரத்னம் எடுக்குறப்போவே ரெண்டு பார்ட்டா எடுத்து முடிச்சு முதல் பாகம் ரிலீசுக்கு ரெடி ஆகி வருது, பலரும் பார்க்கணும்ன்னு ஆர்வமா எதிர்பார்க்குற ஒரு படம்

சூர்யா 42

சூர்யா நடிப்புல சிவா இயக்கத்துல உருவாக போற பிரம்மாண்ட படம் 10 மொழிகள்,3Dன்னு பல தொழில்நுட்பத்துல வர்ற இந்த படம் இரண்டு பாகமா உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தியன் 2

கமல் நடிப்புல ஷங்கர் இயக்கத்துல 1996-ல் ரிலீசாகி சக்கைபோடு போட்ட படம் இந்தியன் , இந்த படத்தோட இரண்டாம் 2022-ல் இப்போ உருவாகிட்டு இருக்கு.

விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்துல சூரி,விஜய்சேதுபதி எல்லாம் நடிச்சுட்டு இருக்குற படம் , முதல்ல ஒரு பாகமா எடுக்கணும்ன்னு ஆரம்பிச்சு ரசிகர்களுக்கு விரிவா கதை சொல்லணும்ன்னு இரண்டு பாகமா மாற்றப்பட்ட படம்

விக்ரம் 3

1986-ல் முதல் பாகம் வெளியாகி 2022-ல் வெளியான விக்ரம் படம் முதல் பாகத்தோட தொடர்ச்சியா வந்துச்சு.இந்த 2022 விக்ரம்ல அடுத்த பாகத்திற்கான லீட் காட்சிகளை வெச்சு அடுத்த பாகத்திற்கு ரெடி ஆகி ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்காங்க

கைதி 2

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல கார்த்தி நடிச்சு 2019-ல் செம ஹிட் அடிச்ச படம் கைதி.ஹாலிவுட் பட ஸ்டைல்ல இந்த படத்தோட கதையும் விக்ரம் படத்தோட கதையும் கனெக்ட் ஆக Multiverse தமிழ் சினிமாவுல பிரபலம் ஆச்சு . ஏற்கனவே கைதி படத்தோட முதல் பார்ட்ல செகண்ட் பார்ட் வருதுன்னு சொன்னவங்க 2022 விக்ரம் ல அடுக்கான லீட் ஸ்ட்ரோங்கா வெச்சு இருக்காங்க.அடுத்த வருஷம் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கும்ன்னு தெரியுது

வடசென்னை 2

2018-ல் வெளியாகி ஒரு செம கேங்ஸ்டர் படமா ரசிகர்கள் மத்தியில கவனம் ஈர்த்த படம் தனுஷ் நடிச்ச வடசென்னை.வெற்றிமாறன் இயக்குன இந்த படம் ரசிகர்களோட Favourite படமா இருக்குது.இந்த படத்தோட இரண்டாம் பாகம் லீட் கொடுத்திருந்தாலும் , மத்த பட வேலைகளால் இந்த படம் தள்ளிபோய்க்கிட்டே இருக்கு,இருந்தாலும் படத்தோட செகண்ட் பார்ட் எப்போ ரெடி ஆகும்ன்னு ரசிகர்கள் வெயிட் பண்றாங்க

கே ஜி எப் 3

கன்னட சினிமாவோட மார்க்கெட்டை மொத்தமா மாற்றுன ஒரு படம், ஹாலிவுட் தூரத்துல இந்தியாவும் படம் எடுக்கும்ன்னு காட்டுன ஒரு படம் . யாஷ் நடிச்சு 2 பாகங்கள் ஹிட் அடிச்ச படத்தோட மூன்றாவது பாகம் சில வருடங்கள்ல வரும்ன்னு எதிர்பார்க்கப்படுது , இதற்கான அறிவிப்பு இரண்டாம் படத்தோட முடிவுல வெச்சுருந்தது குறிப்பிடத்தக்கது

புஷ்பா 2

அல்லு அர்ஜுன் நடிச்சு பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ரிலீஸ் ஆன திரைப்படம் , இந்தியா முழுக்க பிரியா வரவேற்பை பெற்று வசூல் சாதனை பண்ண திரைப்படம் , படத்தோட இரண்டாம் பாகம் ஷூட்டிங் சமீபத்துல ஆரம்பிச்சது இந்த செகண்ட் பார்ட் ரிலீஸ் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகிட்டு இருக்காங்க

சந்திரமுகி 2

2005-ல் ரிலீசான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மெகாஹிட் படம் சந்திரமுகி , இந்த படத்தோட செகண்ட் பார்ட் இப்போ உருவாகிக்கிட்டு இருக்கு ராகவா லாரன்ஸ் இந்த படத்தோட ஹீரோவாக நடிச்சுட்டு இருக்காரு.

பிச்சைக்காரன் 2

விஜய் ஆன்டனி நடிச்சு சூப்பர்ஹிட் அடிச்ச பிச்சைக்காரன் படத்தோட செகண்ட் பார்ட் இப்போ ரெடி ஆகிட்டு இருக்கு இந்த படம் மூலமா விஜய் ஆன்டனி டைரக்டர் ஆகவும் அறிமுகமாகுறாரு

வேட்டையாடு விளையாடு 2

கெளதம் மேனன் இயக்கத்துல கமல்ஹாசன் நடிச்ச செம ஹிட் திரைப்படம் வேட்டையாடு விளையாடு , இந்த படத்தோட செகண்ட் பார்ட் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துட்டு இருக்கு சீக்கிரமே ஷூட்டிங் ஆரம்பிக்கும்ன்னு எதிர்பார்க்கப்படுது

ஆயிரத்தில் ஒருவன் 2

கார்த்தி நடிச்சு செல்வராகவன் இயக்குன ஒரு வளரற்று படம் , படம் ரிலீஸ் அப்போ பெரிய வரவேற்பு கிடைக்கலேனாலும் , அதுக்கு அப்பறம் பெரிய வரவேற்பை பெற்ற படம் . இந்த படத்தோட இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டிருக்கு சீக்கிரமே பட வேலைகள் தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுது.

திரிஷ்யம் 3

மோகன்லால் நடிச்சு பெரிய வெற்றியடைஞ்ச படம் திரிஷ்யம் , இந்த படத்தோட இரண்டாம் பாகம் ரிலீசாகி லாக்டவுன் நேரத்துல பெரிய வரவேற்பை பெற்றது.இந்த படத்தோட மூன்றாவது பாகம் சீக்கிரம் உருவாகப்போகுது

லூசிபர் 2

மோகன்லால் நடிச்சு பிரித்விராஜ் இயக்கத்துல ரிலீஸ் ஆன இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தோட இரண்டாம் பாக ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துட்டு இருக்கு சீக்கிரமே ஷூட்டிங் தொடங்கும்னு தெரியுது

ராம்

மோகன்லால் , த்ரிஷா நடிப்புல உருவாகிற இந்த படம் இரண்டு பாகங்களா உருவாகிட்டு இருக்கு.மலையாள ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் விறுவிறுப்பாக தயாராகிட்டு இருக்கு

ஆக்ஷன் ஹீரோ பிஜு 2

நிவின் பாலி நடிச்சு சூப்பர்ஹிட் அடிச்ச இந்த படத்தோட இரண்டாம் பாகம் சீக்கிரமே ஸ்டார்ட் ஆக போகுதுன்னு தகவல் கிடைச்சிருக்கு

ஜிகர்தண்டா 2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல தயாரான இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.இந்த படத்தோட செகண்ட் பார்ட் சமீபத்துல அறிவிச்சாங்க , இந்த படம் Pan Indian படமா உருவாக இருக்குது

பிசாசு 2

மிஸ்கின் இயக்கத்துல வந்த வித்தியாசமான பேய் படம் நல்ல ஹிட் அடிச்சது.இதனை அடுத்து இந்த படத்தோட அடுத்த பாகம் ஆண்ட்ரியா நடிப்புல உருவாகியிருக்க இந்த படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுது.

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்துல அருள்நிதி நடிச்ச இந்த ஹாரர் படம் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை பெற்றிருந்தது,இந்த படத்தோட செகண்ட் பார்ட் அடுத்து உருவாக இருக்கு.

துப்பறிவாளன் 2

விஷால் நடிச்சு மிஸ்கின் இயக்குன இந்த படம் சூப்பர்ஹிட் அடிச்சது,இந்த படத்தோட செகண்ட் பார்ட் விறுவிறுப்பாக உருவாகிட்டு இருக்கு

தி கிரே மேன் 2

தனுஷ் முக்கிய வேடத்துல நடிச்ச இந்த ஹாலிவுட் படத்தோட அடுத்த பார்ட் ரொம்ப சீக்கிரமே ஷூட் ஆரம்பிக்க போறாங்க இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருது

இன்று நேற்று நாளை 2

விஷ்ணு விஷால் நடிச்சு செம ஹிட் அடிச்ச டைம் ட்ராவல் படம் இன்று நேற்று நாளை , இந்த படத்தோட இரண்டாம் பாக வேலைகள் இப்போ ஆரம்பிச்சு விறுவிறுப்பாக நடந்துட்டு இருக்கு

இப்படி பல பார்ட்களா வர்ற படங்கள் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை வாங்குறத்தோடு நம்ம சினிமா தரத்தையும் உயர்த்துறதால இது ஒரு ஆரோகியமான வளர்ச்சியா கருதப்படுது.இன்னும் பல வெற்றி படங்கள் இந்த Formula-ல உருவாகும்ன்னு எதிர்பார்க்கப்படுது