சினிமா பல 100 கோடிகள் வியாபாரம் நடக்கும் ஒரு Business.சினிமா மூலமா பல பேர் கொடிகட்டி பறந்துட்டு இருக்காங்க.கொரோனா வந்த அப்பறம் மக்கள் தியேட்டருக்கு வர்றது குறைய ஆரம்பிச்சது.ஒரு பெரிய தொற்று வந்து மக்கள் ஒண்ணா இருக்க கூடாதுன்னு பல தடைகள் வர தியேட்டருக்கு வர்ற மக்களோட எண்ணிக்கை கொஞ்சம் குறைஞ்சது.

இப்படி நிலைமை போயிட்டு இருக்கையில சில முக்கிய நடிகர்களோட படங்கள் ரிலீஸ் ஆகி , அந்த எண்ணத்தை எல்லாம் தவிடு பொடியாக்குச்சு.பல படங்கள் பல 100 கோடிகளை வசூலிச்சு தியேட்டர்களை பழைய நிலைமைக்கு எடுத்துட்டு வந்துச்சு.மக்கள் பழைய மாதிரி தியேட்டருக்கு வந்தாங்க.

முன்ன மாதிரி எல்லா படத்துக்கும் மக்கள் தியேட்டருக்கு வரலனாலும் , பெரிய நடிகர்கள் , முன்னணி நடிகர்கள்  படங்கள் , பிரம்மாண்ட படங்கள் , முக்கிய இயக்குனர்கள் படங்கள்ன்னு நிறைய படங்களை ரசிகர்கள் பழைய மாதிரி தியேட்டர்ல என்ஜாய் பண்ண ஆரம்பிச்சாங்க.

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுட்டு இருக்குற பொன்னியின் செல்வன் வரைக்கும் கொரோனாவுக்கு பிறகு அப்படி என்னென்ன படங்கள் வெளிவந்துருக்கு , என்னென்ன படங்கள்லாம் மக்கள் தியேட்டருக்கு வந்து கொரோனாவுக்கு பிறகு எந்த தமிழ் படங்களை ரசிச்சு பார்த்தாங்க அப்டிங்கிறத இப்போ பார்க்கலாம் வாங்க.

மாஸ்டர்

கொரோனவை அடுத்து பல படங்கள் ஹிந்தி படங்கள் கூட பெருசா ஓடாத நிலையில , 2021 பொங்கலுக்கு வெளியாகி பல திரையரங்குகளுக்கு நம்பிக்கை தர்ற வரையில இந்த படம் கொரோனாவுக்கு பிறகு முதல் ஹிட்டாக அமைஞ்சது.எந்த படமுமே ஓடாத நிலைமையில வந்து இந்த படம் 200 கோடிகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜய் ஹீரோவாக நடிச்ச இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல விஜய் கூட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிரட்டல் வில்லனா நடிச்சு கலக்கியிருப்பாரு.இவங்களுக்கு பக்கபலமா அனிருத் தன்னோட இசையில மிரட்ட.இந்த படம் பலரோட Favourite படமாக அமைஞ்சுருக்கு.கொரோனா பெருந்துதொற்றுக்கு பிறகு வந்து பெரிய வசூல் பண்ண முதல் படமாக இருக்குறதால இது ஸ்பெஷல் படமாக இருக்கு.

டாக்டர்

மாஸ்டர் வந்து கொஞ்ச நாள் மக்கள்லாம் திரையரங்கிற்கு வந்துட்டு இருக்குறப்போ யாரும் எதிர்பார்க்காத வகையில கொரோனா இரண்டாவது அலை வந்தது.மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் ஒரு இக்கட்டான நிலை அப்போ சிவகார்த்திகேயன் நடிச்ச டாக்டர் படம் 2021 ஆயுத பூஜையை ஒட்டி ரிலீசாச்சு.நெல்சன் இயக்கத்துல வெளியான இந்த படம் மக்கள் மத்தியில அமோக வரவேற்பை பெற்று மீண்டும் திரையரங்குகளுக்கு உயிர் கொடுத்துச்சு.100 கோடிக்கு மேல வசூல் பண்ணி செம ஹிட் அடிச்சது இந்த டாக்டர் படம்.

அண்ணாத்த

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்சு 2021 தீபாவளிக்கு ரிலீசான படம் அண்ணாத்த.கிட்டத்தட்ட 25 வருஷம் கழிச்சு தீபாவளிக்கு ரிலீசான ரஜினி படம் , முத்து படத்துக்கு பிறகு கிராமத்து பின்னணியில நடக்குற கதைன்னு நிறைய எதிர்பார்ப்புகளோட வந்த படம்.இந்த படம் ரசிகர்கள் ஆதரவோட 100 கோடியை தாண்டுச்சு.பலரும் குடும்பம் குடும்பமா இந்த படத்தை ரசிச்சாங்க

மாநாடு

2021 டிசம்பர்-ல ரிலீஸ் ஆன மாநாடு படம் தமிழோட முதல் டைம் லூப் படமா ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிச்சது.சிலம்பரசன் நடிச்சு பல வருஷம் கழிச்சு வெளியாகிற படம் , வெங்கட் பிரபுவோட வித்தியாசமான டைரக்ஷன்னு பல சிறப்பம்சங்களோட வெளிய வந்த இந்த படம் பெரிய ஹிட் அடிச்சது.பல வாரங்கள் இந்த படம் ஹவுஸ்புல்லா போச்சு.இந்த படமும் 100 கோடியை வசூல் பண்ணி சாதனை படைச்சது.

வலிமை

2022 பிப்ரவரில ரிலீசான இந்த படம் எல்லார் கிட்டயும் பெரிய வரவேற்பை பெற்றது.அஜித் குமார் நடிப்புல ரிலீசான இந்த படம் பெரிய பண்டிகை எதுவும் இல்லாம வெளியாகி பெரிய ஹிட் அடிச்சது.ரசிகர்கள் மனம் கவர்ந்த இந்த படம் 200 கோடிகளை கடந்து பெரிய ஹிட் அடிச்சுருந்தது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட்

2022 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசான தளபதி விஜயோட பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்போட ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாங்கியிருந்துச்சு.200 கோடி வசூல் பண்ணி இந்த படம் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

டான்

2022 மே மாசம் ரிலீசாகி சக்கைபோடு போட்ட படம் டான்.டாக்டர் படத்தோட வெற்றியை அடுத்து ஒரு காலேஜ் ஸ்டோரியில சிவகார்த்திகேயன் களமிறங்க ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை படம் வாங்குச்சு.ரசிகர்கள் கிட்ட எமோஷனலா கனெக்ட் ஆன இந்த படம் 100 கோடிக்கு மேல வசூல் பண்ணி சாதனை படைச்சுது.

விக்ரம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்புல லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல 2022 ஜூன்ல ரிலீஸ் ஆன இந்த படம் பக்கா ஆக்ஷன் என்டேர்டைனர் படமாக பெரிய வரவேற்பை வாங்குச்சு.இந்த படத்தோட வசூல் பல படங்களையும் ஆச்சரியப்படுத்துச்சு.விஜய் சேதுபதி,பஹத் பாசில் போன்ற நடிகர்கள் சேர்ந்து நடிச்ச இந்த படம் 400 கோடிகளுக்கு மேல வசூல் பண்ணி தமிழ் சினிமாவோட அதிக வசூல் செஞ்ச படம் என்ற பெருமையை பெற்றிருக்கு.

பொன்னியின் செல்வன்

தமிழர்களோட வரலாறை எடுத்து சொல்ற பொன்னியின் செல்வன் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.இரண்டு பாகமா உருவாகியிருக்க இந்த படத்தோட முதல் பாகம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கிட்டு இருக்கு.மணி ரத்னம் இயக்கத்துல வெளியாகிருக்க இந்த படம் 3 நாள்ல 200 கோடிகளை கடந்து வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு

ஒரு சறுக்கலை சந்திச்சு எழுந்துருக்க நம்ம தமிழ் சினிமா அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை தர ரெடி ஆகியிருக்கு அடுத்தடுத்து வர்ற படங்கள் பெரிய வெற்றி பெற்று புது மைல்ஸ்டோன்களை படைக்கும்ன்னு எதிர்பார்க்குறோம்.