தமிழர்களின் வரலாறை கூறும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுக்கவேண்டும் என பலரும் முயற்சித்து வந்தனர்.சில காரணங்களால் இந்த படம் தொடங்குவது தள்ளிப்போய் வந்தது.இந்த நாவலில் சோழர்களின் வரலாறு தத்ரூபமாக கூறப்பட்டிருக்கும்.இதில் பலருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருப்பது வந்தியத்தேவன் தான்.

இந்த கதாபாத்திரத்தில் பல முன்னணி நடிகர்களும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டனர்.அது யார் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.முதன் முதலில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என நினைத்தது மக்கள் திலகம் எம் ஜி ஆர் தான்,இதன் உரிமத்தை வாங்கியதோடு வந்தியத்தேவனாக நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டார் எம் ஜி ஆர்.சில காரணங்களால் இந்த படம் உருவாவது தள்ளிப்போனது.

அடுத்ததாக இந்த படத்தினை உலகயநாயகன் கமல்ஹாசன் எடுக்க நினைத்து உரிமத்தை வாங்கினார்.முதலில் கமல் வந்தியத்தேவனாக நடிக்கவேண்டும் என நினைத்தார் பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வந்தியத்தேவனாக நடிக்க,கமல்ஹாசன் அருண்மொழி வர்மனாக நடிக வேண்டும் என நினைத்தார்.பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படம் நடைபெறாமல் போனது.

கமலிடம் இருந்து பின்னர் இயக்குனர் மணிரத்னம் படத்தின் உரிமத்தை கைப்பற்றினார்.2015-2016 கட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தினை தொடங்கவிருந்தார், வந்தியத்தேவனாக தளபதி விஜய் நடிக்க ஷூட்டிங் ஆரம்பமாக இருந்தது, படம் சில காரணங்களால் தள்ளிப்போக படத்தில் நடிக்கும் நடிகர்களின் கால்சீட் பிரச்சனை எழுந்து பின்னர் படம் மீண்டும் தள்ளிப்போனது

இப்படி பல முறை தள்ளிப்போன இந்த படம் இறுதியாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.சீயான் விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்தி,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இதில் கார்த்தி வந்தியத்தேவனாக நடித்துள்ளார்.எம்ஜிஆர்,ரஜினி,கமல்,விஜய் என மாஸ் ஹீரோக்கள் பண்ண வேண்டும் என ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கதாபாத்திரம் காலப்போக்கில் கார்த்தி வசம் வந்துள்ளது.இந்த கதாபாத்திரம் படத்தில் எப்படி வந்துள்ளது என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.