இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய், தல அஜித், தனுஷ், விக்ரம், சூர்யா, ஜூனியர் என்டிஆர், பவன் கல்யாண், மகேஷ் பாபு, பிரபாஸ், அஜய் தேவ்கன் என அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும் சீட்டிமார் & தட் இஸ் மகாலட்சுமி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தெலுங்கில் வெளிவர உள்ளன.

அடுத்ததாக நடிகை தமன்னா நடித்திருக்கும் புதிய பாலிவுட் திரைப்படம் அடுத்து வெளிவர தயாராகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தமன்னா இணைந்து நடித்திருக்கும் பிளான் ஏ பிளான் பி திரைப்படத்தை இயக்குனர் ஷஷாங்கா கோஷ் இயக்கியுள்ளார். 

நடிகை வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர் படத்தை எழுதிய எழுத்தாளர் ராஜட் அரோரா எழுதியுள்ள பிளான் ஏ பிளான் பி படத்தை இந்தியா ஸ்டோரீஸ் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் திரிலோக் மல்ஹோத்ரா மற்றும் கே.ஆர்.ஹரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது பிளான் ஏ பிளான் பி திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பிளான் ஏ பிளான் பி  டீசர் & டிரைலர் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.