தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து அதில் முழுமூச்சில் ஈடுபட்டு அசத்துபவர் நடிகர் சித்தார்த். சமீபத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் என அடுத்தடுத்து இரண்டு ரிலீஸ் தந்து பட்டையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 , சைத்தான் கா பச்சா போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டக்கர். 

siddharth

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தை கப்பல் புகழ் இயக்குனர் கார்த்தி ஜி.கிரிஷ் இயக்குகிறார். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

takkar

சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். தற்போது படத்திலிருந்து நிரா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம், கவுதம் மேனன், மால்வி பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.