இயக்குனர் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாணா. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் வைபவ் இதில் நாயகனாக போலீஸ் ரோலில் நடிக்கிறார். நோபிள் மூவி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

vaibhav

நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு,பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவா GRN ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

vaibhav vaibhav

சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. ஜனவரி 24-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. தற்போது படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்திலிருந்து டாணா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வேலு மற்றும் பாலாஜி ஸ்ரீ பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.