ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, கிச்சா சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

chiranjeevi

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்கா பேட்டை என்ற இடத்தில் இருக்கும் சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்திலேயே பிரமாண்ட கோட்டை அரங்கு அமைக்கப்பட்டு அதில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டது. அமித் த்ரிவேதி இசையமைத்த இந்த படத்தில் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் வசனம் எழுதியுள்ளார்.

syeraa

இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. பிரிடடீஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சைரா நரசிம்ம ரெட்டி என்பது கூடுதல் தகவல்.

supergoodfilms