பிரபல தொகுப்பாளராக மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ஸ்வாதிஷ்டா.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கத்தொடங்கினார் ஸ்வாதிஷ்டா.

இளைஞர்கள் இவரை இன்ஸ்டாவில் பின்தொடர இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.வெகு விரைவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ஸ்வாதிஷ்டா.சவரகத்தி,கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் அசத்தியுள்ளார் ஸ்வாதிஷ்டா.

தற்போது இவர் நடித்திருக்கும் ஒரு முக்கிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள விக்ரம் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதை படக்குழுவினர் இவரை டேக் செய்து உறுதிசெய்துள்ளனர்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கிடையே திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கமல்,விஜய்சேதுபதி,பஹத் பாசில் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இவரை போன்ற வளரும் கலைஞரும் நடிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பெரிய படத்தில் ஒரு பகுதியாக இணைந்ததற்காக ரசிகர்களும் பிரபலங்களும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.