விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்த சீரியல்களில் நடித்த பலரும் ரசிகர்களின் பேராதரவை பெற்று நட்சத்திரங்களாக மாறி உள்ளனர்.பலர் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி.

இந்த தொடரின் நாயகனாக அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் ராஜு நடித்து வந்தார்.பிரியங்கா குமார் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

2021 ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தொடர் , வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.200 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ஹிட் தொடராக ரசிகர்கள் மத்தியில் முன்னேறியுள்ளது.இந்த தொடரின் நாயகன் தர்ஷன் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகியுள்ளார்,இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக கன்னடத்தில் பிரபலமான ஸ்வாமிநாதன் தொடரின் புதிய நாயகனாக இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இந்த தொடரில் இருந்து விலகியது குறித்த காரணத்தை தர்ஷன் லைவில் தெரிவித்துள்ளார்.இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது