விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கிறது செந்தூரப்பூவே தொடர்.ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வருகிறார்.

யமுனா சின்னதுரை,சாந்தி வில்லியம்ஸ்,ப்ரியா ராமன் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக அதிவிரைவில் அவதரித்தது.
பல விறுவிறுப்பான திருப்பங்களோடு சென்று வந்த இந்த தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சில மாதங்கள் நிறுத்தப்பட்டது.

இந்த தொடர் இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது.இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை சுஷ்மா நாயர் இணைத்துள்ளார்.இந்த தொடரில் நடித்து வந்த நடிகை சில காரணங்களால் விலக இவருக்கு பதிலாக சுஷ்மா இணைந்துள்ளார்.

ஏற்கனவே நாயகி தொடரில் வில்லியாக நடித்து அசத்தி பல ரசிகர்களை பெற்ற சுஷ்மா மீண்டும் வில்லி வேடத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.புது சீரியலில் என்ட்ரி தரும் இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனை தவிர ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை தொடரிலும் ஒரு நாயகியாக சுஷ்மா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.