தில் பேச்சரா படத்தின் தாரே கின் பாடல் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | July 15, 2020 14:55 PM IST

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பேச்சரா. இதன் ட்ரைலர் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காகும்.
சமீபத்தில் வெளியான ட்ரைலரை பார்த்து விட்டு, காதலின் அழகிய வெளிப்பாடாக இந்த படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். ட்ரெய்லரில் சுஷாந்த் சிரிப்பதை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. பாலிவுட்காரர்களின் வெறுப்பால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது. சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் என்றெல்லாம் கமெண்ட் செய்தனர் ரசிகர்கள்.
தில் பேச்சரா படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஃபாரா கான் கோரியோகிராப் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து தாரே கின் பாடல் வீடியோ வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.
மோஹித் செளஹான் மற்றும் ஷ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளார். வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார். டிஸ்னி ஹாட்ஸ்டாரைப் பார்க்க சந்தாதாரர்களாக இல்லாமல் இருப்பவர்களும் இந்தியாவில் இப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம்.
சுஷாந்தின் ரொமான்ஸை ரசிக்கும் ரசிகர்கள், ஒட்டு மொத்த பாடல் ஆல்பத்தையும் ரிலீஸ் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Popular actress walks out of this Tamil TV serial - fans sad!
15/07/2020 04:23 PM
Chiyaan Vikram film's director announces another historical epic film!
15/07/2020 03:44 PM
Taara Ginn official video song | Sushant Singh | AR Rahman
15/07/2020 02:01 PM