பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கில் தொங்கியதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாம். 

Sushant Singh Rajput Postmortem Reports Confirm Suicidal Death

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துவிட்டார். மேலும் அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற அடையாளங்கள் உள்ளன. அவர் மரணம் தற்கொலையால் நடந்ததே. அவர் தூக்கில் தொங்கியதாலேயே இறந்தார் என அறிக்கை கூறுகிறது. இது ஆரம்ப கட்ட அறிக்கை மட்டுமே, விரிவான முழு பிரேத பரிசோதனை அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன

Sushant Singh Rajput Postmortem Reports Confirm Suicidal Death Sushant Singh Rajput Postmortem Reports Confirm Suicidal Death

சுஷாந்தின் சிங்கின் தாய்மாமா இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மைத்துனர் ஓ.பி சிங் ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு போலீஸ் அதிகாரியாவார். அவரும் சுஷாந்த் இறப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையோ தற்கொலை என கூறுகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புட் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயம் அவரது ரசிகர்களால் அவரின் இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை.