பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 14-ம் தேதி மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மரணத்துக்கான காரணங்களை அறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்களின் ஆதர்ஷ நாயகன் மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவதி படுகின்றனர் ரசிகர்கள். 

Sushant Singh Rajput Lookalike Spotted On Tiktok

சுஷாந்தின் குடும்பத்தினர் அவரது இறுதி சடங்குகளை முடித்து விட்டு, இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கின்றனர். விசாரணை ஒருபுறம் நடந்து வந்தாலும், அவர் குறித்த பதிவுகள் அவர் நடித்த படங்கள் என தினமும் அவர் நினைப்பாகவே உள்ளனர் பாலிவுட் திரை பிரியர்கள். 

Sushant Singh Rajput Lookalike Spotted On Tiktok

இந்நிலையில் அச்சு அசல் சுஷாந்த் சிங் ராஜ்புட் போல இருக்கும் டிக்டாக் நடிகரின் வீடியோ வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு சுஷாந்த் சாயலில் உள்ள இந்த நபர், நடையிலும் ஸ்டைலிலும் சுஷாந்த் போலவே உள்ளார். எங்கள் ஹீரோ இறக்கவில்லை, மீண்டும் வந்துவிட்டார் என்ற இன்பதிர்ச்சியில் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.