மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் சூர்யபுத்ர மஹாவீர் கர்ணா. இந்தப் படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.

இந்தப் படத்தை பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. முன்னதாக இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் டைட்டில் லோகோ குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு படம் கைவிடப்படவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.  

இந்தப் படத்தில் கர்ணனாக விக்ரம் நடிப்பார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது.

இந்த அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் பிரம்மாண்ட படைப்பை காணப்போகிறோம் என்ற ஆவலில் உள்ளனர். மேலும் பாகுபலி, பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் வரிசையில் இந்த சூர்யபுத்ர மஹாவீர் கர்ணா இடம்பெறும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.