விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முன்னதாக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், கடந்த வார எலிமினேஷனில் நாடியா சாங் வெளியேறினார்.

இதனையடுத்து 3-வது வாரத்தின் கேப்டனாக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் ப்ராசஸ்-ல் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பமானது. இதில் நாணயத்தை கைப்பற்றி வெற்றி பெறும் போட்டியாளர்கள் தன்னையோ அல்லது தான் விரும்பும் ஒரு போட்டியாளரையோ எலிமினேஷன் பிராசஸ்-ல் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதால் இந்த டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்றைய (அக்டோபர் 20) நிகழ்ச்சியில் அபிஷேக் குறித்து ராஜுவும் இமான் அண்ணாச்சியும் பேசிக்கொண்டிருக்கும் முதல் ப்ரோமோ வெளியான நிலையில், சற்று முன் வெளியான 2-வது ப்ரோமோவில் சுருதி ஒருபுறம் கேமராவின் முன்னால் நின்று குற்றம்சாட்டி கொண்டிருக்க, மறுபுறம் வருண் மற்றும் பிரியங்கா இணைந்து “அபிஷேக் INFLUENCE பண்றது தப்பு” என அனல் பறக்க வாதிடுகிறார்கள். இந்த புதிய ப்ரோமோ வீடியோ இதோ…