கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இதுகுறித்து திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களும் குழந்தைகளும் தற்போது விட்டிற்குள்ளேயே உள்ளனர்.

2dEntertainment

இந்நிலையில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் குழந்தைகளின் தனித்திறமையை காட்டுவதற்கு சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின், நடனம், ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் திறமைகளை வீடியோ எடுத்து 2dproductionno8@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அல்லது 917904287619 என்ற எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்ப வேண்டும். 

2DEntertainment

2DEntertainment

இதில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளை ஆடிஷன் செய்து, சூர்யா கம்பெனி எடுக்கவிருக்கும் 8-வது படத்தில் நடிக்க வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2டி நிறுவனம் கைவசம் சூரரைப்போற்று மற்றும் பொன்மகள் வந்தாள் போன்ற படங்கள் உள்ளது.