சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

suriya

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் மாறா தீம் பாடல் வெளியாகி சக்கை போடு போட்டது. 

sooraraipottru 2dentertainment

படத்தின் இரண்டாம் பாடலான வெய்யோன்சில்லி பாடல் வரும் 13-ம் தேதி நாளை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெளியாகவுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சூர்யாவுடன் சேர்ந்து 100 அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக விமானத்தில் பயணிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.