காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Suriya Soorarai Pottru Making On Apr 14 Sun TV

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.GV பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Suriya Soorarai Pottru Making On Apr 14 Sun TV

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் சற்று தாமதமாகியுள்ளது.இந்த படத்தின் மேக்கிங் அடங்கிய நிகழ்ச்சி ஒன்றை தமிழ் புத்தாண்டன்று சன் டிவி ஒளிபரப்புகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.