நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. தனது நகைச்சுவை காட்சிகளில் நம்மை சிரிக்க வைப்பதோடு பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வைத்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். நடிகர் விவேக்கின் இறப்பு செய்தி பல கோடி மக்களுக்கும் மரங்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

கடைசியாக விவேக் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் தர்ம பிரபு. அடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன்2 மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய திரைப்படங்கள் விவேக்கின் கடைசி திரைப்படங்கள் ஆகும்.இதில் உலக நாயகனுடன் விவேக் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இந்தியன்2 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான லொல் எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியில் நடிகர் விவேக் நடுவராக கலந்து கொண்டுள்ளார். நடிகர் விவேக் கலந்து கொண்ட கடைசி நகைச்சுவை நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியில் மற்றொரு நடுவராக நடிகர் மிர்ச்சி சிவா இருக்கிறார். 

மேலும் நடிகர்கள் பிரேம்ஜி, சதிஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், குக் வித் கோமாளி புகழ், ஆர்த்தி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் விவேக் கலந்துகொண்ட லொல் எங்க சிரி பார்ப்போம் ரியாலிட்டி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது

இந்த லொல் எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். தனது ட்விட்டர் பதிவில், “இவர் எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார்... விவேக் அவர்களின் கடைசி நகைச்சுவை நிகழ்ச்சியின் இந்த வீடியோவை பகிர்வதில் பெருமை கொள்கிறேன்” குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.அந்த ப்ரோமோ வீடியோ இதோ...