தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

முன்னதாக நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசாகிறது. ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஜெய்பீம் திரைப்படத்தில் லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன், மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க,S.R.கதிர் ஒளிப்பதிவில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் வெளிவந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் உள்ளடங்கிய JUKEBOX தற்போது வெளியானது. ஜெய்பீம் படத்தின் தரமான பாடல்கள் இதோ…