தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

2020-ல் சுதா கொங்கரரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

நேற்று 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன இதில் சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த படம்,சிறந்த திரைக்கதை,சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.இதுகுறித்து பலரும் தங்கள் பாராட்டுகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது வென்றது குறித்து சூர்யா தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.விருது வென்றது பெரும் மகிழ்ச்சி,இதுபோன்ற விருதுகள் தான் அடுத்தடுத்து நல்ல படங்களை செய்ய ஊக்குவிக்கும் என்றும்,தனக்கு இத்தனை வருடங்களாக உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.தன்னுடன் விருது வென்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.