கன்னடத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் புனீத் ராஜ்குமார்.பவர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்வது,சமூக அக்கறை கொண்ட செயல்களை செய்வது என்று பல துறைகளில் தன்னால் முடிந்த உதவியை செய்து வந்தார்.

46 வயதான இவர் அக்டோபர் 29ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் புனீத் உயிரிழந்தார்.புனீத்தின் திடீர் மறைவு கன்னட சினிமாதுறையினர் மட்டுமின்றி இந்தியா சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.எப்போதும் முகத்தில் சிரிப்போடு இருக்கும் இவர் மிகவிரைவில் பிரிந்துவிட்டார் என்று ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசு மரியாதையுடன் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.பல முக்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரது உடலுக்கு மரியாதையை செலுத்தினர்.இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத பலரும் உடலடக்கம் செய்யப்பட்ட பின்பும் தற்போதும் வந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சூர்யா புனீத்தின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வருகின்றனர்.புனீத் விரைவில் நம்மை விட்டு சென்று விட்டார் அவரது மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு என சூர்யா தெரிவித்துள்ளார்.