காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தொடர்ந்து இவர் சிவா இயக்கும் சூர்யா 39 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Suriya Next With Ravikumar Dream Warrior Pictures

இதனை தவிர இயக்குனர் ஹரியுடன் ஒரு படம்,கெளதம் மேனனுடன் ஒரு படம் என்று தனது ஹிட் பட இயக்குனர்களுடன் இணைகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Suriya Next With Ravikumar Dream Warrior Pictures

இந்த படத்தை இன்று,நேற்று நாளை,SK 14 படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்குவார் என்ற தகவலும் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya Next With Ravikumar Dream Warrior Pictures