உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Suriya Karthi Sivakumar Donate 10 Lakhs To FEFSI

பள்ளி கல்லூரிகளுக்கு,அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை FEFSI வெளியிட்டிருந்தனர்.

Suriya Karthi Sivakumar Donate 10 Lakhs To FEFSI

Suriya Karthi Sivakumar Donate 10 Lakhs FEFSI

இதனால் பலதொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.மேலும் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.தற்போது நடிகர் சிவகுமார்,சூர்யா,கார்த்தி மற்றும் குடும்பத்தினர் ரூ.10 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.