கொரோனா வைரஸ் உலகத்தையே கடந்த 2019 இறுதி முதல் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.பலரும் இந்த கொடிய நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.பல உயிர்கள் இந்த நோயால் பிரிந்தன.2020-ல் உலகில் பல தொழில்களை ஸ்தம்பிக்க செய்தது இந்த கொரோனா வைரஸ்.

2020 பாதியில் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்தது மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.இந்த நேரத்தில் கொரோனாவிற்கு சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இன்னும் எந்த அளவு மருந்து நோயை குணப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மீண்டும் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் வைரஸ் தாக்கம் அதிகம் இருந்து தற்போது தான் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்துள்ளது.

பலரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வந்தனர்.தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.