படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா செய்த சாகசம் !
By Sakthi Priyan | Galatta | October 06, 2020 18:46 PM IST

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்ற ஆதர்ஷ நாயகன்.
இந்நிலையில் சூர்யாவின் பழைய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ காட்சியை பார்க்கையில் ஆதவன் படத்தில் வரும் காட்சி போல் உள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆதவன். இந்த படத்தில் 500 அடி பாலத்தில் இருந்து நீரில் குதிக்கிறார் சூர்யா. டூப் எதுவும் இல்லாமல் சற்றும் யோசிக்காமல் சூர்யா செய்த இந்த சாகசம் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ஒரு சில ரசிகர்கள், இதில் என்ன ஆச்சர்யம்... காக்க காக்க படத்திலேயே ஓப்பனிங் காட்சியில் சூர்யாவே தான் குதித்தார். மேலும் 24 படத்திலும் உயரமான பாலத்தில் இருந்து ஓடும் ரயிலில் இருந்து சூர்யா குதித்திருப்பார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சூர்யா கைவசம் சூரரைப் போற்று திரைப்படம் உள்ளது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படமாகும். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறார்.
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.
Man Of Hardwork And Dedication @Suriya_offl 🔥#SooraraiPottru #SooraraiPottruOnPrimeOct30 pic.twitter.com/ch3Mba20eJ
— Suriya Fans Army™ (@Suriyafans_army) October 6, 2020
Deepest condolences to actor Ajay Devgn and family!
06/10/2020 07:13 PM
Kajal Aggarwal's unseen pictures with her future husband goes viral - check out!
06/10/2020 05:17 PM