தான் ஒரு ஆகச் சிறந்த நடிகர் என தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாயிலாகவும் நிரூபித்து வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் விரைவில் தயாராகவுள்ள வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் சூர்யா தயாரித்து நடித்து வெளிவரும் திரைப்படம் ஜெய்பீம்.

இயக்குனர் த.சே.ஞானவேல் எழுதி இயக்கும் ஜெய் பீம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோமொள் ஜோஸ் மணிகண்டன் ராஜிஷா விஜயன் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். S.R.கதிர் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த ஜெய் பீம் படத்தின் டீசர் மற்றும் "பவர்" பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசாகும் ஜெய்பீம் படத்தின் ட்ரெய்லர் வருகிற அக்டோபர் 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.